ஆந்திர எம்.எல்.ஏ ஆனார் கேத்ரின் தெரசா
மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. அதன்பிறகு கணிதன், கதகளி படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.கேத்ரின் தெரசா, அல்லு அர்ஜூன் ஜோடியாக சமீபத்தில் நடித்து வெளிவந்திருக்கும் படம் சரைனொடு. இதில் அவர் ஹன்சிதா ரெட்டி என்ற பெயரில் எம்.எல்.ஏவாக நடித்துள்ளார். இந்த படம் ஹிட்டாகவும், ஆந்திர ரசிகர்கள் இவரை எம்.எல்.ஏ என்று அழைக்ககிறார்கள். எங்கு சென்றாலும் அடுத்த தேர்தலில் எங்க தொகுதியில நிக்கணும்னு சொல்றாங்களாம். ஆந்திர ரசிகர்கள் என்னை எம்.எல்.ஏ என்று அழைப்பது சந்தோஷமாக இருக்கிறது. அந்த அளவிற்கு அவர்கள் மனதில் அந்த கேரக்டர் இடம்பெற்றுள்ளது. தற்போது கோபிசந்த் ஜோடியாக ஒரு படத்திலும், ராணா ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறேன். தமிழில் ஆர்யாவுடன் கடம்பன் படத்தில் நடித்து வருகிறேன். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் இப்போது கவனம் செலுத்தி வருகிறேன்” என்கிறார் கேத்ரின் தெரசா