கோஹ்லி சதத்தால் இந்தியா ரன் குவிப்பு
வெஸட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராத் கோஹ்லி சதம் அடிக்க இந்திய அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்ததுவெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட், ஆண்டிகுவா, விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது. ‛டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, பேட்டிங் தேர்வு செய்தார். லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜாவுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை இந்திய அணியின் துவக்க வீரர் முரளி விஜய், 7 ரன் எடுத்த போது, கேபிரியலின் பவுன்சரில் சிக்கினார். பின் தவானுடன் புஜாரா இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, முதல் ஒரு மணி நேரத்தில் இந்தியா, 25 ரன் கூட எடுக்கவில்லை. புஜாரா 16 ரன் எடுத்த போது பிஷூ சுழலில் சிக்கினார். துவக்க வீரர் தவான், டெஸ்ட் அரங்கில் தனது 3வது அரைசதம் எட்டினார். மறுபுறம் கோஹ்லி துரிதமாக ரன் சேர்க்க, உணவு இடைவேளைக்குப் பின் இந்திய அணியின் ரன் வேகம் அதிகரித்தது. கேப்ரியல் ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த தவான், 84 ரன்களில் பிஷூ சுழலில் சிக்கி சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். கோஹ்லி டெஸ்ட் அரங்கில் 13வது அரைசதம் அடித்தார்தேநீர் இடைவேளைக்குப் பின் கேப்ரியலின் முதல் ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை அடித்த ரகானே, பிஷூவின் ஓவரிலும் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை விரட்டினார். ஆனால் அவர் அதிரடி அதிக நேரம் நீடிக்கவில்லை. 22 ரன்களில் பிஷூவின் சுழலில் சிக்கிய ரகானே பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய அஸ்வின் நிதானமாக விளையாட, மறுபுறம் கேப்டன் கோஹ்லி அதிரடியாக ரன் குவித்தார். பரத்வைட் பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் ஒரு ரன் எடுத்த கோஹ்லி 134 பந்தில் சதத்தை எட்டினார். இது அவரது 12வது சதம்சதமடித்த பின் அதிரடியாக விளையாடிய கோஹ்லி, பிஷூவின் பந்தில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளும், சேஷின் ஓவரில் ஒரு பவுண்டரியும் அடித்தார். மறுபுறம் அஸ்வின் விக்கெட்டை பறிகொடுக்காமல் நிதானப் போக்கை கடைபிடித்தார். முதல்நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது. கேப்டன் கோஹ்லி 143 ரன்களுடனும்(197 பந்துகள், 16 பவுண்டரி), அஷ்வின் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பிஷூ 3 விக்கெட்டுகளும், கேப்ரியல் ஒரு விக்கெட்டும் கைபற்றினர்