அஜித் படத்தில் கமலின் இளைய மகள்
அஜித் அடுத்ததாக ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் பூஜை முடிவடைந்துள்ள நிலையில் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகிக்காக காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கமலின் இளையமகளான அக்ஷரா ஹாசன் ‘தல57’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. அக்ஷரா ஹாசன் ஏற்கெனவே இந்தியில் பால்கி இயக்கத்தில் தனுஷ்-அமிதாப் இணைந்து நடித்து வெளிவந்த ‘ஷமிதாப்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது, கமல் நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். அஜித் படத்தில் அக்ஷராவுக்கு ஹீரோயின் வேடம் இல்லையாம். இருப்பினும், வேதாளம் படத்தில் லட்சுமிமேனன் நடித்த கதாபாத்திரத்திற்கு இணையாக இந்த படத்தில் அக்ஷராவின் கதாபாத்திரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளது. செப்டம்பர் மாதம் ‘தல57’ படப்பிடிப்பில் அக்ஷராஹாசன் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது