விஜய் படத்தில் மோகன்லால்
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன்லால், மலையாளத்தில் தான் நடித்த பல படங்களை வாங்கி தானே ரிலீஸ் செய்திருக்கிறார். அதோடு மற்ற மலையாள நடிகர்கள் நடித்த சில படங்களையும் அவர் வாங்கி வெளியிட்டி ருக்கிறார். அந்த வகையில், தமிழில் விஜய்யுடன் இணைந்து நடித்த ஜில்லா படத்தை கேரளாவில் அவர்தான் ரிலீஸ் செய்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்தது. அதையடுத்து இப்போது ரஜினியின் கபாலி படத்தின் கேரளா ரிலீஸ் உரிமையை மோகன்லால்தான் வாங்கியிருக்கிறார். இதுவரை தனது படங்களைகூட வெளியிடாத அளவுக்கு அதிகப்படியான தியேட்டர்களில் கபாலியை வெளியிடுகிறார் மோகன்லால். இதைத் தொடர்ந்து தற்போது பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60-வது படத்தையும் மோகன்லால்தான் கேரளாவில் வெளியிடுகிறாராம். கபாலி படத்தைப்போலவே விஜய் படத்தையும் கூடுதலான தியேட்டர்களில் பிர மாண்டமாக வெளியிடவும் திட்டமிட்டுள்ளாராம்