பிளாசியை தக்கவைத்தது சென்னையின் எஃப்சி
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 3-ஆவது சீசனுக்கு மானுவேல் பிளாசியை தக்கவைத்துக் கொண்டது சென்னையின் எஃப்.சி. இதுகுறித்து, சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் மார்கோ மெட்டாரஸி கூறுகையில், "களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பிளாசியின் அனுபவம் எங்களுக்கு முக்கியமான ஒன்று. இந்த சீசனிலும் அவர் எங்கள் அணியில் தொடருவது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார். நடுகள ஆட்டக்காரரான பிளாசி, கடந்த ஐஎஸ்எல் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரான அரையிறுதி, கோவாவுக்கு எதிரான இறுதி ஆட்டங்களில் சென்னை அணி சார்பில் பங்கேற்றார். பிளாசி கூறுகையில், "கடந்த சீசனில் சென்னை அணியில் விளையாடி கோப்பையை வென்றது தனிப்பட்ட முறையில் சிறந்த தருணம். இந்த சீசனிலும் சென்னை அணியில் தொடருவது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்