வாய்ப்பு கிடைத்தால் 4-0 என வெற்றி பெறுவோம் விராட் கோலி உறுதி
வாய்ப்பு கிடைத்தால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் 4-0 என வெற்றி பெறுவோம் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். ஆன்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது குறித்து அவர் கூறியதாவது: நாங்கள் வெற்றி பெறும் பழக்கம், நல்ல பழக்கத்தை உருவாக்க விரும்புகிறோம். வெற்றி பெறும் பழக்கம் என்பது ஒரு தொற்று போல் பரவ வேண்டும். எந்த சூழ்நிலையிலிருந்தும், உலகின் எந்தப் பகுதியாக இருந்தாலும் வெற்றிதான் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பது ஒரு பழக்கமாகவே மாற வேண்டும். ஒவ்வொரு தொடரிலும் கற்றுக் கொள்கிறோம், ஒவ்வொரு போட் டியிலும் கற்றுக்கொள்கிறோம் என்ற மனநிலையுடன் களமிறங்கினால் கடினமான சூழ்நிலைகளிலிருந்து வெற்றி பெறுவதற்காக ஆடுவது எப்போது? நமக்கு நாமே சவால்களை சிறிதளவு உருவாக்கிக் கொள்ள வேண்டும். தற்போது எங்களுடைய அணி உலகின் எந்தப் பகுதியிலும் வலிமையானதாக இருக்க விரும் புகிறது. இந்த டெஸ்ட் போட்டியை முடித்த விதம் அதற்காக ஆடிய விதம் என்று அனைத்துமே சிறப் பாக அமைந்தது. பந்து வீச்சாளர்களிடம் இருந்து சிறப்பான திறன் வெளிப்பட்டது. முதல் இன்னிங்ஸில் அனைவரும் போதிய ஓவர்களை வீசவில்லை என்று உணர்ந்தனர். அதனால்தான் மீண்டும் பந்து வீசுவது என்று முடிவெடுத்தோம். மேற்கிந்தியத் தீவுகளின் முதல் இன்னிங்ஸை சரியான நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வந்தோம். இதனால் அதே நாளில் மேலும் 13-14 ஓவர்கள் வீசமுடிந்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்ற முடிந்தது. ஒட்டுமொத்த பந்து வீச்சு குழுவும் திட்டத்தை களத்தில் சரியாக செயல்படுத்தியதில் ஒரு கேப்டனாக நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் போட்டி எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. இது போன்ற ஆட்டத்தையே நாங்கள் விரும்புகிறோம். வாய்ப்பு இருந் தால் தொடரில் 4-0 வெற்றி பெறு வோம். இதை ஏன் நாங்கள் செய்யக்கூடாது. நாங்கள் மெத்தன மாக இருக்கமாட்டோம். தொடரில் 2-0 என முன்னிலை பெற்றால் அடுத்து இரு போட்டிகளையும் டிரா செய்வதற்காக விளை யாடமாட்டோம். இவ்வாறு விராட் கோலி கூறினார்.