சர்வதேச கார் பந்தயங்களில் கலக்கவுள்ள சென்னை வீரர்





சென்னையை சேர்ந்த கார் பந்தய வீரரான அர்மான் இப்ராஹிம்(வயது-26), இம்மாதம் இரண்டு சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று விளையாடவுள்ளார்.  அர்மான் இப்ராஹிம், முன்னாள் இந்திய F3 கார் பந்தய சாம்பியனான அக்பர் இப்ராஹிமின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.  கொரியாவில் எதிர்வரும் மே 13-ம் தேதி  முதல் 15-ம் தேதி வரை நடக்கும் GT Asia Championship கார் பந்தய தொடரில் முதல் முறையாக இப்ராஹிம் பங்கேற்று விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதை தொடர்ந்து, சீனாவில் மே 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடக்கும் தொடரில், இரண்டாவது முறையாக பங்கேற்று விளையாடவுள்ளார்.  ஜே.கே. டயர் ஆதரவோடு, மீண்டும் இலங்கை வீரர் Malagamuwa-வுடன்அணி சேர்ந்து இப்ராஹிம் விளையாடவுள்ளார்.  கடந்த ஆண்டு நடந்த தொடரில், இப்ராஹிம்-Malagamuwa அணி இரண்டாவது இடத்தை பிடித்தது.  இதுகுறித்து இப்ராஹிம் கூறுகையில், எதிர்வரும் நாட்கள் நிச்சயமாக எனக்கு ஒரு அற்புதமான நாட்களாக இருக்கும் என நம்புகிறேன்.  இந்த நாள் வரைக்கும எனக்கு பின்னால் நின்று ஆதரவு அளித்து வரும் ஜே.கே.டயருக்கு நன்றி, வரும் தொடர்களின் முடிவு எனக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறேன்.  கடந்த ஆண்டு இரண்டாவது இடம் பிடித்தோம், கண்டிப்பாக இந்த முறை முதலிடத்தை பிடிப்போம் என இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad