ஜடேஜாவுக்கு எச்சரிக்கை தண்டனை வழங்கப்படும்
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜ்கோட்டில் நடந்த 9வது பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் பஞ்சாப் அணி 23 ரன் கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது. இதில், பஞ்சாப் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் வீசிய 11 வது ஓவரின் முதல் பந்தில் குஜராத் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அவுட் வழங்கப்பட்டது. இதற்கு ரவீந்திர ஜடேஜா எதிர்ப்பு தெரிவித்தார், பிரீமியர் கிரிக்கெட் 2.1.5 விதிமுறைப்படி அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குற்றமாகும். எனவே, இனிவரும் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும், அவ்வாறு ஈடுபட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.