ஐ.பி.எல் சிக்கலில் கோஹ்லி




தாமதமாக பந்துவீசிய விவகாரத்தில் இரண்டாவது முறையாக சிக்கிய விராத் கோஹ்லிக்கு ரூ. 24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. இவர் மீண்டும் சிக்கினால், ஒரு போட்டிக்கு தடை விதிக்கப்படும். ஐ.பி.எல்., தொடரில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் அணிகள் பந்துவீசி முடிக்க வேண்டும். புனேவுக்கு  எதிரான போட்டியில் பெங்களூரு அணி தாமதமாக பந்துவீசியது. இதற்காக கேப்டன் கோஹ்லிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது இந்தச் சூழலில் நேற்று முன் தினம் நடந்த கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டியிலும் பெங்களூரு அணி பவுலர்கள் தாமதமாக பந்துவீசினர். இதையடுத்து கேப்டன் என்ற முறையில் கோஹ்லிக்கு ரூ. 24 லட்சம் மற்றும் சக ; வீரர்களுக்கு தலா ரூ. 6 லட்சம் அபராதமாக  விதிக்கப்பட்டது.





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad