சிறுவனின் கேள்விக்கு அசத்தலாக பதிலளித்த யுவராஜ் சிங்
புற்றுநோயிலிருந்து மீண்டு வந்துள்ள யுவராஜ் சிங், தற்போது ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 17 சிறுவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களில் பெரும்பாலான சிறுவர்கள் 7 முதல் 8 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது சிறுவன் ஒருவன், நீங்கள் மீண்டும் தொடர்ந்து ஆறு சிக்ஸர்கள் அடிப்பீர்களா? என கேள்வி எழுப்பினார். அப்போது, நீங்கள் வேண்டிக் கொண்டால் நிச்சயம் அடிப்பேன் என பதிலளித்தார். கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது