திக்திக் நிமிடங்களை பகிர்ந்து கொண்ட டெய்லர்
தீவிர இதய பாதிப்பு காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியிலிருந்து ஒய்வு பெற்ற முன்னாள் வீரர் ஜேம்ஸ் டெய்லர், தான் உயிர் பிழைத்த கதையை மருத்துவமனையில் விவரித்துள்ளார். ஒரு நொடி இறக்க போகிறோம் என நினைத்ததாக டெய்லர் கூறியுள்ளது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இங்கிலாந்து அணிக்காக டெய்லர், 7 டெஸ்ட் போட்டிகளிலும், 27 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஒரு நாள், பயிற்சியின் போது டெய்லருக்கு உடல்நலக்குறைவு எற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் அணியிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது நலமாக மருத்துவமனையில் இருக்கும் டெய்லர் தனக்கு பயிற்சியின் போது ஏற்பட்ட உடல்நலக்குறைவை விவரித்துள்ளார். அதில், அன்று நான் வழக்கம் போல் பயிற்சியை தொடங்கினேன், பயிற்சியின் முடிவில் என்னுடைய மார்பு பகுதியில் ஒரு இறுக்கம் ஏற்பட்டது. இறுக்கத்தை தொடர்நது என் இதயம் மிக வேகமாக துடித்தது, அப்போது குளிர் சுமார் நான்கு டிகிரி இருக்கும். ஆனால், எனக்கு தரையை தொடும் அளவிற்கு வியர்வை கொட்டியது, என் உடல்நிலை சரியாக இல்லை என்பதை நான் நன்றாக உணர்ந்தேன். அப்பொழுது தான், நான் இறக்க போகிறேன் என நினைத்தேன் என கூறியுள்ளார். மேலும், இனி நான் கிரிக்கெட் விளையாட முடியாது என்பதை என்னும் போது எனக்கு மன வேதனையாக இருந்தது. ஆனால், இந்த நோய் பாதிப்பினால் பலர் உயிரிழந்துள்ளனர் என டாக்டர் என்னிடம் சொன்னபோது, நான் அழுவதை நிறுத்திவிட்டேன், இப்போது, இந்த கதையை சொல்லும் நிலையில் நான் இருப்பது அதிர்ஷ்டம் தான் என டெய்லர் கூறியுள்ளார்.