உழைப்பாளி, மன்னன் பாணியில் ரஜினியின் கபாலி
ஆரம்ப காலத்தில் வித்தியாசமான கதைகளில் நடித்து வந்த ரஜினி, தனக்கென ஒரு ஸ்டார் வேல்யூ ஏற்பட்ட பிறகு தனது கதை தேர்வை மாற்றி விட்டார். அதாவது, பாசிட்டிவ் வேடங்களாக, குறிப்பாக, ஏழைகளுக்காக போராடும் கதைகளாக நடித்தார். அதுதான் அவரை குறுகிய காலத்தில் சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது. அந்த வகையில், உழைப்பாளி, மன்னன் என பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த படங்களில் எல்லாம் ஏழை தொழிலாளர்களுக்காக முதலாளி வர்க்கத்திடம் போராடும் வேடத்தில் நடித்தார் ரஜினி. அதேபோல்தான் இப்போது கபாலி படத்திலும் அவர் தொழிலாளர்களுக்காக போராடும் வேடத்தில் நடித்துள்ளார். வேலை தேடி மலேசியா சென்றவர்கள் அங்கு ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொள்கிறார்களாம். அந்த சேதியறிந்த ரஜினி, அங்கு விரைந்து சென்று பிரச்சினைக்குரியவர்களுடன் போராடி ஏழை தொழிலாளர்களை காப்பாற்றி தாயகம் கொண்டு வருவதுதான் படத்தின் கதையாம். ஆக, கபாலி ரஜினியின் வழக்கமான பார்முலா படம்தான் என்றாலும் அதை புதிய பாணியில் படமாக்கியிருக்கிறாராம் ரஞ்சித்