பாகிஸ்தானில் தஞ்சமடைந்த “குட்டி மெஸ்ஸி”




கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான் மெஸ்ஸியின் தீவிர ரசிகனான 5 வயது சிறுவன் முர்டஸா அகமதியின் குடும்பம் தற்போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளது.  ஆப்கானிஸ்தானின் காபூல் நகர் அருகே ஜகோரி என்ற கிராமத்தை சேர்ந்தவன் முர்டஸா அகமதி.  5 வயது சிறுவனான அகமதி, பிளாஸ்டிக் பையால் ஆன மெஸ்ஸியின் ஜெர்சியை அணிந்து விளையாடுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.  இதனையடுத்து மெஸ்ஸியை நேராக சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், மெஸ்ஸி தான் கையெழுத்திட்ட கால்பந்து மற்றும் ஜெர்சியை அகமதிக்கு அனுப்பி வைத்தார்.  இந்நிலையில் இவன் தனது குடும்பத்தினருடன் தற்போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளான்.  இதுகுறித்து அகமதியின் தந்தை கூறுகையில், இணையதளங்களில் அகமதி பிரபலமடைந்துவிட்டதால், தீவிரவாதிகளால் அவனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என கருதினேன்.  தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் மூலம் மிரட்டல் வந்து கொண்டிருந்தன, இதனால் பாதுகாப்பு கருதி பாகிஸ்தானிற்கு வந்தோம் என தெரிவித்துள்ளார்
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad