தமிழரை கவுரப்படுத்திய ஹாலிவுட்
இந்தியாவில் அதுவும் நம் தமிழ்நாட்டில் பிறந்தவர் கணித மேதை ராமானுஜன். இன்றைய ஏடிஎம் செயல்பாடுகளின் சூத்திரதாரி அவர்தான். அயல்நாடு நோபல் பரிசு கொடுத்தபோதும் உள்நாடு ஏனோ அவரை கவனிக்கவில்லை. இயக்குனர் ஞானராஜசேகரன் ராமானுஜத்தின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்தார். தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் அவரது வாரிசுகளே தயாரித்தார்கள். சாவித்ரி பேரன் அபிநய், சுஹாசினி, பாமா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்தார்கள். ஆனாலும் தமிழ் மக்ககள் ராமானுஜத்துக்கு ஆதரவளிக்கவில்லை. ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்றை ஹாலிவுட்டில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார்கள். தி மேன் ஹூ நியூ இன்பினிட்டி என்பது படத்தின் தலைப்பு. மாத்தீவ் ப்ரோவ்ன் இயக்குகிறார். ரோபர்ட் கனிகல் என்ற எழுத்தாளர் எழுதிய ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை தழுவி எடுக்கப்படுகிறது. ப்ரஸ்மேன் பிலிம் எண்டர் டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. வார்னர் பிரதர்ஸ் வெளியிடுகிறது. ஸ்லம் டாக் மில்லினர் படத்தில் நடித்த தேவ் படேல் ராமானுஜராக நடிக்கிறார். பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் இப்படம் ஏற்கனவே ரிலீஸாகவிட்டது. இந்தியாவில் விரைவில் வெளியாக இருக்கிறது