மகாராஷ்ராவில் ஐ.பி.எல் போட்டிக்கு தடை
மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வெளியே ஐ.பி.எல் போட்டிகளை மாற்றுவதற்கு எதிராக மும்பை கிரிக்கெட் சங்கம் மற்றும் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் அளித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மே-1 ம் திகதி முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எந்த மைதானத்திலும் ஐ.பி.எல் போட்டி நடைபெறாது என்பதை உச்ச நீதிமன்றம உறுதிசெய்துள்ளது. மகாராஷ்டிரா, இந்த ஆண்டு கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டு தள்ளாடி வருகிறது . இந்நிலையில், ஐ.பி.எல் தொடர் காரணமாக மாநிலத்தில் உள்ள முக்கிய கிரிக்கெட் மைதானங்கள் பல ஆயிரம் லிற்றர் தண்ணீர் உபயோகபடுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது, வறட்சியின் பிடியில் மாநிலம் இருப்பதால், பொது நலன் கருதி அனைத்து ஐ.பி.எல் போட்டிகளையும், மே மாதம் முதல் மாநிலத்திற்கு வெளியே மாற்றப்பட வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது உச்ச நீதிமன்றமும், அத்தீர்ப்பையே முன்மொழிந்துள்ளது. இதனால், பிசிசிஐ-யின் கனவு தகா்ந்துள்ளதுடன், கடும் நெருக்கடியை சமாளிக்க வேண்டிய நிலையில் தற்போது பிசிசிஐ உள்ளது. இறுதி போட்டி உட்பட 12 ஆட்டங்களில் மகாராஷடிரா மாநிலத்திற்கு வெளியே மாற்றப்படும் வேண்டும். இதற்காக, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, ஜெய்ப்பூர், கான்பூர் மற்றும் ராய்ப்பூர் ஆகிய மூன்று இடங்களில் இருந்து ஒரு இடத்தை தெரிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மும்பை அணி மே மாதம் முதல் தங்களது தாயகமாக ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தை தேரிவு செய்துள்ளனதாக கூறப்படுகிறது. இந்நிலையில். ராஜஸ்தானில் மாநிலத்தில் உள்ள வறட்சி நிலைமை மகாராஷ்டிரா விட மோசமாக இருக்கிறது. இவ்வாறு இருந்தும் எப்படி ஐ.பி.எல் போட்டி இங்கு நடத்த உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது என ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடா்பாக ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன் அரசாங்கம், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் மே 3 ஆம் திகதி ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் வழங்கும் என அறிவித்துள்ளது. இதுதொடா்பாக பதில் அளித்துள்ள பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர், வறட்சி காரணத்தினால் மகாராஷ்டிராவில் நடைபெறவிருந்த போட்டிகள், இந்தியாவின் வேறு மாநிலத்திற்கோ அல்லது வெளிநாட்டிற்கோ மாற்றப்படும். அதற்கான, நடவடிக்கையில் ஐ.பி.எல் அதிகாரிகள் குழு ஈடுபட்டு வருகின்றனா் என தெரிவித்துள்ளார்.