ரஜினிமுருகனால் லிங்குசாமிக்கு லாபம் கிடைக்குமா
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ரஜினி முருகன் நீண்ட நாட்களாக நிதி நெருக்கடியில் சிக்கியிருந்தது. அதனால் பல தேதிகள் அறிவிக்கப்பட்டும் அந்த தேதிதகளில் படம் வெளிவராமல் தடை பட்டு மாதக்கணக்கில் முடங்கிக் கிடந்தது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் என்.லிங்குசாமி தயாரித்த ரஜினி முருகன் படத்தின் பட்ஜெட் என்னவோ குறைவுதான். லிங்குசாமி தயாரிப்பில் கடந்த வருடம் வெளியான உத்தமவில்லன் படத்தினால் ஏற்பட்ட கடன் பிரச்சனை காரணமாக, சுமார் 50 கோடி இருந்தால்தான் ரஜினி முருகுன் படத்தை வெளியிட முடியும் என்ற நிலை உருவானது. கடந்த சில மாதங்களாக பல்வேறு பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரச்சனைகளை சமாளித்து பொங்கலுக்கு வெற்றிகரமாக படத்தை ரிலீஸ் செய்துவிட்டார் லிங்குசாமி. பொங்கல் படங்களில் நம்பர் ஒன் என்ற ரிசல்ட்டோடு வெற்றியடைந்துள்ளது ரஜினி முருகன். இத்தனை வெற்றியடைந்தும் லிங்குசாமிக்கு பலன் உண்டா? அல்லது கடன்காரர்களுக்குத்தான் பயன்படுமா? நமக்குக் கிடைத்த தகவலின்படி... ரஜினி முருகன் படம் மீதான கடன்களை அடைத்துவிட்டு, தானே சொந்தமாக எம்.ஜி.அடிப்படையில் ரிலீஸ் செய்திருக்கிறாராம் லிங்குசாமி. அதன் அடிப்படையில் ரஜினி முருகன் படத்தின் வசூல் மூலம் கிடைக்கும் லாபம் அவருக்கே கிடைக்குமாம். லிங்குசாமி இத்தனை நாள் பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைத்துவிட்டது.