அஷ்டமியை கண்டு பயப்படும் பாண்டிராஜ்
பாண்டிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘பசங்க-2’, ‘கதகளி’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டு படங்களை வெற்றிப் படங்களாக கொடுத்த மகிழ்ச்சியில் இயக்குனர் பாண்டிராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, நான் எப்போதும் நல்ல நேரம் பார்த்துதான் எந்த வேலையையும் செய்வேன். இன்று பத்திரிகையாளர்களை சந்திப்பதாக கூறிவிட்டு, காலையில் எழுந்து காலண்டரை பார்க்கும்போது அஷ்டமி என்று போட்டிருந்தது. ஏற்கெனவே அஷ்டமி தினத்தில் ஒரு படத்தை எடுக்க ஆரம்பித்து, அது பெரிய பிரச்சினையை கொடுத்தது. அதனால், அஷ்டமி தினமான இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து வம்பில் மாட்டிவிடக்கூடாது என்று யோசித்தேன். இருந்தாலும், உங்களை பார்த்துவிட்டு போய்விடலாம் என்றுதான் இங்கு வந்தேன். என்னை கேள்வி கேட்டு வம்பில் மாட்டிவிட்டு விடாதீர்கள் என்று பத்திரிகையாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.