கிறிஸ் கெய்லுக்கு யுவ்ராஜ் சிங் இலக்கு பத்து பந்துகளில் அரை சதம்
பிக் பாஷ் லீக் போட்டியில், அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் - மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 ஆட்டத்தில் கிறிஸ் கெயில் 12 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து யுவ்ராஜ் சிங்கின் சாதனையை சமன் செய்தார். கெய்ல், 12 பந்துகளில் அரை சதம் எடுத்து சாதனை செய்தார் (7 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி). பிறகு அவர் 17 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2007 டி20 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 12 பந்துகளில் அரை சதம் எடுத்தார் இந்தியாவின் யுவ்ராஜ் சிங். அதுவே இதுவரை உலக சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில் அந்தச் சாதனையை தற்போது கெய்ல் சமன் செய்துள்ளார். எனினும் கெய்லின் இந்தச் சாதனை உள்ளூர் போட்டியில் நிகழ்த்தப்பட்டது என்பதால் சர்வதேச கிரிக்கெட்டில் யுவ்ராஜின் சாதனையே இன்னமும் நீடிக்கிறது. கெய்ல் சாதனை குறித்து யுவ்ராஜ் சிங் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: கெய்ல், 12 பந்துகளில் அரை சதம் எடுத்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. அடுத்தமுறை நீங்கள், 10 பந்துகளில் அரை சதம் எடுக்கவேண்டும். டிவில்லியர்ஸும் என்று ட்வீட் செய்துள்ளார்.