5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை மிரட்ட வரும் ஷான் டைட்
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் அவுஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் தற்போது பிக் பாஷ் லீக் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் டிராவிஸ் ஹெட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அன்ட்ரிவ் டை ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மேலும், 32 வயதாகும் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட் இடம்பெற்றுள்ளார். இவர் 161.1 கி.மீ வேகத்தில் பந்துவீசி உலகளவில் 3வது அதிவேகப் பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றவர். இவர் கடந்த 2005ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 2007ல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமானார். 3 டெஸ்ட், 35 ஒருநாள் மற்றும் 19 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் கடந்த 2011ம் ஆண்டு இடம்பிடித்தார். அதன்பின் 5 வருடங்களுக்குப் பிறகு தற்போது இந்தியாவிற்கு எதிரான தொடரில் இடம்பிடித்துள்ளார். மேலும், இவருடன் டெஸ்ட் அணியில் முத்திரை பதிக்கும் நாதன் லயன் தெரிவாகியுள்ளார்.
டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:-
1. ஆரோன் பிஞ்ச் (அணித்தலைவர்), 2. டேவிட் வார்னர், 3. ஸ்மித், 4. வாட்சன், 5. மேக்ஸ்வெல், 6. மேத்யூ வடே, 7. ஜேம்ஸ் பால்க்னர், 8. ஜான் ஹாஸ்டிங்ஸ், 9. ஷான் மார்ஷ், 10. கேமரூன் பாய்ஸ், 11. நாதன் லயன், 12. கிறிஸ் லின் 13. டிராவிஸ் ஹெட், 14. கேன் ரிச்சர்ட்சன், 15. ஆண்ட்ரூ டை, 16. ஸ்காட் போலந்து, 17. ஷான் டைட்.