'எல்நினோ'வால் தென் இந்தியாவில் அதிக மழைக்கு வாய்ப்பு: ஐ.நா. எச்சரிக்கை
El Niño is the warm phase of the El Niño Southern Oscillation (commonly called ENSO) and is associated with a band of warm ocean water that develops in the central and east-central equatorial Pacific (between approximately the International Date Line and 120°W), including off the Pacific coast of South America. El Niño Southern Oscillation refers to the cycle of warm and cold temperatures, as measured by sea surface temperature, SST, of the tropical central and eastern Pacific Ocean. El Niño is accompanied by high air pressure in the western Pacific and low air pressure in the eastern Pacific. The cool phase of ENSO is called "La Niña" with SST in the eastern Pacific below average and air pressures high in the eastern and low in western Pacific. The ENSO cycle, both El Niño and La Niña, causes global changes of both temperatures and rainfall. Mechanisms that cause the oscillation remain under study.
Developing countries dependent upon agriculture and fishing, particularly those bordering the Pacific Ocean, are the most affected. In Spanish, the capitalized term "El Niño" refers to the Christ child, so named because periodic warming in the Pacific near South America is often noticed around Christmas. "La Niña", chosen as the 'opposite' of El Niño, literally translates to "The Girl".
A recent study has reported a robust tendency to more frequent extreme El Niños, occurring in agreement with a separate recent model prediction for the future
'எல்நினோ'வால் தென் இந்தியாவில் அதிக மழைக்கு வாய்ப்பு: ஐ.நா. எச்சரிக்கை
'எல்நினோ' தாக்கத்தின் காரணமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தென் இந்தியா வழக்கத்தை விட அதிக மழை வெள்ளத்தை காணும் என்று ஐ.நா. ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை பசிபிக் கடல் மட்டத்தின் வெப்ப நிலை அதிகரிக்கிறது. இதனால் உலக அளவில் பருவநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. பசிபிக் கடல் நீர் மட்டத்தின் வெப்பம் அதிகரிப்பதை ‘எல் நினோ’ என்கிறார்கள். எல்நினோவின் தாக்கம் கடந்த 1998-ம் ஆண்டு கடுமையாக இருந்தது. அதை விட இந்த ஆண்டு அதாவது 2015-2016-ம் ஆண்டு இதன் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று ஐ.நா. ஆய்வறிக்கை எச்சரித்துள்ளதுஇது தொடர்பாக ஐ.நா.வின் ஆசிய பொருளாதார மற்றும் சமூக அமைப்பு, பசிபிக் மற்றும் மண்டல ஒருங்கிணைந்த முன்னெச்சரிக்கை மையம் ஆகியவை கூட்டாக வெளியிட்டு உள்ள 3வது அறிவுறுத்தல் குறிப்பில், "2015-16-ம் ஆண்டு எல்நினோவின் தாக்கம் கம்போடியா, மத்திய மற்றும் தென் இந்தியா, கிழக்கு இந்தோனேஷியா, மத்திய மற்றும் தெற்கு பிலிப்பைன்ஸ், மத்திய மற்றும் வடகிழக்கு தாய்லாந்து ஆகிய நாடுகளில் மிகப்பெரிய அளவில் இருக்கும். குறிப்பாக தென் இந்தியாவின் பல பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான மழை இருக்கும். இதனால் இன்னும் வெள்ளப்பெருக்கு ஏற்படும். தென்கிழக்கு ஆசிய நாடுகள், குறிப்பாக இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் பலத்த மழை காரணமாக கடுமையான வெள்ளத்தை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். இதேபோல் சில பசிபிக் நாடுகளான பபுவா நியூகினியா, திமோர்-லெஸ்தே, வனாட்டு ஆகியவை கடுமையான வறட்சியை சந்திக்க நேரிடும். 1997-1998-ம் ஆண்டு ஏற்பட்ட எல் நினோவின் தாக்கத்தைவிட 2015-2016-ம் ஆண்டு ஏற்படும் எல்நினோ மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். இலங்கை மற்றும் இந்தியாவின் தென்பகுதியில் வழக்கத்தை விட மழை கூடுதலாக பெய்யும். இதனால் மேலும் வெள்ளம் ஏற்படும் நிலை உருவாகும். குறிப்பாக நகர்ப்புறங்களில் வெள்ளம் அதிகமாக காணப்படும். கடந்த நவம்பர் மாதம் பெய்த கன மழையால்தான் பெருமளவில் உயிர்ச்சேதமும் ஏற்பட்டது. சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 2015-2016 எல்நினோவின் தாக்கம்தான் காரணம் என்பதை நேரடியாக தொடர்புபடுத்தி கூறுவதற்கு விஞ்ஞான ரீதியான விரிவான புலனாய்வுகள் எதுவும் இல்லை. அதேநேரம் தெற்கு ஆசியாவில் வழக்கத்தை விட வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை பெய்ததற்கு, இந்தியாவில் நிலவிய அதிகபட்ச தட்பவெப்ப நிலைதான் காரணம் என்பதையும், இதில் எல்நினோ குறிப்பிட்ட பங்கு வகித்ததையும் சுட்டிக் காட்ட முடியும்" என்று கூறப்பட்டுள்ளது.