ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர் டில்லியை வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது கோவா
ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் பைனலுக்கு கோவா அணி முன்னேறியது. நேற்று நடந்த இரண்டாவது சுற்று அரையிறுதியில் டில்லி அணியை என்ற கோல் கணக்கில் வென்றது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 2வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாவது சுற்று அரையிறுதியில் டில்லி, கோவா அணிகள் மீண்டும் மோதின.
முதல் சுற்று அரையிறுதியில் என, வென்ற டில்லி அணி, இப்போட்டியை செய்தால் போதும் என்ற நிலையில் களமிறங்கின.
சொந்தமண்ணில் களமிறங்கிய கோவா அணி, துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் 11வது நிமிடத்தில் ஜோப்ரே ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து 27வது நிமிடத்தில் ரபேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் என கோவா அணி முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் இதற்கு பதில் தர டில்லி வீரர்கள் எடுத்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை. கோவா அணியின் தற்காப்பு பகுதியை தாண்டி ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. மாறாக 84வது நிமிடத்தில் கோவா வீரர் டுடு ஒரு கோல் அடிக்க, முடிவில், கோவா அணி 3 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
டில்லி ஏமாற்றம்:
முதல் சுற்று அரையிறுதியில் டில்லி வென்றது. இரண்டாவது சுற்று அரையிறுதியில் அதிக கோல் வித்தியாசத்தில் கோவா வென்றது. கோல் அடிப்படையில் என, முன்னிலை பெற்ற கோவா அணி, பைனலுக்கு முன்னேறியது.