சுவாசிப்பதற்கு கூட காசு வாங்கும் சீன ரெஸ்டாரண்ட்
சீனா வளர்ந்த நாடுகளில் ஒன்று. பொருளாதாரம், வணிகம் முதலியவற்றில் உச்சத்தை எட்டியுள்ளது. ஆனால் அங்கு காற்று மாசுபடுதலும் அதிகரித்துள்ளது. இங்கு விஷமுள்ள வாயுக்களும் காற்றில் அதிகரித்து சுவாசிப்பதற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சீனாவில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட், அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு கட்டணத்தோடு சேர்த்து "air cleaning fee" எனும் கட்டணத்தையும் சேர்த்து வசூல் செய்கிறது. 'ஜான்ஜியாகாங்க்' எனும் நகரத்தில் உள்ள அந்த ரெஸ்டாரண்ட் "ஏர் ஃபில்ட்ரேசன்" எனும் காற்றை வடிகட்டும் கருவிகளை வைத்துள்ளது. இதற்கு காரணம் சீனாவில் காற்று மாசுபடுதல் அதிகரித்துள்ளதே. இதற்காக வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் உணவு பில்லோடு சேர்த்து இந்த கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடம் இருந்தும் தலா 1 யுவான் ஐ வசூல் செய்து வருகிறது. இதை நிறுத்தக் கோரி சில மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதை கவனித்த அந்த காவல் நிலையம், இந்த பில்டர்டு காற்றை மக்கள் சுவாசிக்க விரும்பவில்லை எனவும், இதை உடனடியாக நிறுத்தவும் கூறியுள்ளது. ஆனால் சமூக வலைத்தளங்களில் இந்த முறை வரவேற்பை பெற்றுள்ளது. இங்கு அதிக மக்கள் 1 யுவான் செலவழித்து இந்த சுத்தமான காற்றை சுவாசிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். "இதை வசூல் செய்வதில் எந்த தவறும் இல்லை. இதற்கு இன்னும் 1 யுவான் அதிகமாகவே வசூல் செய்யலாம். ஆனால் அந்த ரெஸ்டாரண்ட் செய்யவில்லை.இந்த முறையை சுற்றுச் சூழல் நலன் கருதி வரவேற்கிறேன்"என ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.