அர்னால்ட் வேண்டாம் ஷங்கர் அதிரடி முடிவு
எந்திரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஷங்கரும் ரஜினியும் எந்திரன் 2 படத்தில் மீண்டும் இணைகிறார்கள். இந்தப் படத்தில் ஏமி ஜாக்ஸன் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார். எந்திரன் 2 படத்தில் வில்லனாக நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகரான அர்னால்ட் ஸ்வாஸ்நேகரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் ஷங்கர். கதை மற்றும் அவரது கதாபாத்திரம் அர்னால்டுக்கு திருப்தி. ஆனால் சம்பள விஷயத்தில் அவர் கறாராக இருந்தாராம். அதாவது தன்னுடைய சம்பளமாக 120 கோடி கேட்டுள்ளார் அர்னால்ட். அவருடைய சம்பளம் 120 கோடியோடு முடியவில்லை, அவருடைய பாதுகாவலர்கள், உதவியாளர்கள் என பெரும் பட்டாளமே படப்பிடிப்புக்கு வரும் என்றும் அவர்களுக்கான தங்கமிடம், உணவு சம்பளம் என பட்ஜெட்டை எகிற வைக்கும் அளவுக்கு பெரிய தொகை கேட்டாராம். இதனால் அர்னால்ட் வேண்டாம் என ஷங்கர் முடிவெடுத்துவிட்டாராம். இப்போது பாலிவுட்டிலிருந்து ஒரு வில்லனைத் தேர்ந்தெடுக்கலாம் என்று தனது புதிய தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளார் ஷங்கர். எனவே விரைவில் வில்லன் தொடர்பான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.