Matrimony OTT-Platforms Jobs Coupons Business

சிம்பு குற்றவாளியா? நிரபராதியா?





சிம்பு உருவாக்கியுள்ள பீப் பாடல் அவருக்குப் பலத்த எதிர்ப்பை உருவாக்கிவிட்டது. சிம்புவைக் கைது செய்யவேண்டும், அவரை திரையுலகில் செயல்பட சில ஆண்டுகளுக்குத் தடைவிதிக்கவேண்டும், கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று பலரும் பலவிதமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லோருடைய ஒட்டுமொத்த உணர்வும், இந்தப்பாடலை உருவாக்கியதற்காக சிம்பு ஏதோவொருவகையில் தண்டிக்கப்படவேண்டுமென்பதே. இந்தப்பாடல் வெளியானபோது, அனிருத் இசையில் சிம்பு பாடியதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அனிருத், இதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று சொல்லியிருக்கிறார். அதேசமயம், டி.ராஜேந்தர் இது தொடர்பாக காவல்துறையில் கொடுத்துள்ள புகாரில், அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்கட்டும்.
அந்தப்புகாரில், டி.ராஜேந்தர் குறிப்பிட்டுள்ளபடி பார்த்தால் இந்தப்பாடல் டம்மியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதை உருவாக்கியது சிம்பும் அனிருத்தும்தான். சிம்புவின் புகழைக் கெடுப்பதற்காக யாரோ அதைத் திருடி வெளியிட்டுவிட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார். அவருடைய கூற்றின்படியே அந்தப்பாடலை உருவாக்கியது சிம்புதான் என்று உறுதியாகியிருக்கிறது. திரைத்துறையில் முதலில் டம்மியாகச் சில சொற்களைப் போட்டு பாடலை உருவாக்குவார்கள். அதன்பின் அதற்காக வரிகளை எழுதிச் சேர்ப்பார்கள். அந்தவகையில் இது டம்மியாக உருவாக்கப்பட்டது. தேவைப்படுகிறபோது நல்ல சொற்களைப் போட்டு பாடலை உருவாக்கி பயன்படுத்திக்கொள்வார்கள். டி.ராஜேந்தரின் புகாரின்படி பார்த்தால் அப்படி டம்மியாக உருவாக்கப்பட்ட பாடல் என்று தெரிகிறது. இதனால் உருவாக்கத்தில் குற்றமில்லை என்பது அவருடைய தரப்பாக இருக்கிறது. இதனால், பாடலை உருவாக்கியவர் குற்றவாளியா? அதை வெளியிட்டவர் குற்றவாளியா? என்கிற கேள்வி எழுகிறது.  சில நல்ல சொற்கள்கூட காலப்போக்கில் வசைச்சொல்லாக மாறிவிடுகின்றன. அந்தவகையில் வசைச்சொல்லாகவே அறியப்படுகிற அந்தச்சொல்லை வைத்துக்கொண்டு ஒரு பாடலை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் சிம்புவுக்கு வந்ததும், ஒரு பாடல் தயாராகிறநேரத்தில் (அது டம்மி என்றாலும் கூட) குறைந்தது நான்கைந்து பேராவது இருப்பார்கள். கழிவறையில் தனியாக இருப்பதுபோல் தனியாக ஒரு பாடலைப் பதிவு செய்யவியலாது. பாடல் உருவாக்கத்தின்போது ஒவ்வொரு சொல்லும் மட்டுமல்ல ஒவ்வொரு எழுத்து பற்றியும் கவனமாக இருப்பார்கள் என்பது பாடல்கள் உருவாக்கத்தில் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும். இப்பாடல் பதிவுசெய்யப்படும்போது அந்தக்கூடத்தில் என்னென்னவெல்லாம் பேசிச்சிரித்திருபபார்கள் என்று நினைக்கும்போதே கோபம் கொப்பளிக்கிறது.  வெகுமக்களுக்குத் தெரிந்த ஒரு கலைஞன், நிறைய இளைஞர்களை ரசிகர்களாகக் கொண்டவனுக்கு இம்மாதிரி ஒரு எண்ணம் வந்ததே முதல்குற்றம் என்கிறார்கள். தான் யார்? தன் குடும்பம் எத்தகையது? தான் செய்யும் செயல்கள் சமூகத்தை எவ்வளவு பாதிக்கும்? என்பதெல்லாம் நன்கு தெரிந்த ஒரு நபர், இப்படிச் செய்யத் துணிகிறாரென்றால் அவருடைய மனநிலையை என்னவென்று சொல்வது? உண்மையிலேயே நல்லமனநிலையுடன்தான் இருக்கிறாரா? என்கிற கேள்விகள் பலருக்கும் வந்திருக்கிறது. அப்பனுக்குப் புள்ள தப்பாம பொறந்திருக்கு என்பார்கள் இங்கோ நிலைமை தலைகீழ், புள்ளைக்கு அப்பன் தப்பாமப் பேசறார் என்று சொல்கிற மாதிரி, பாடல்வரி அது உச்சரிக்கப்பட்டவிதம் அதில் சொல்லப்படும் கருத்து ஆகிய எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் மகனின் புகழைக் கெடுக்கப்புறப்பட்டுவிட்டார்கள் என்று புகார் கொடுக்கக்கிளம்பிவிட்டார் டி.ராஜேந்தர். இதுவரை பெண்களைத் தொட்டுக்கூட நடிக்காத பெருமைக்குச் சொந்தக்காரரான டி.ஆர் இந்த விசயத்தில் விமர்சனம் எதுவுமில்லாமல் மகனுக்கு ஆதரவாகப் பேசியதன் மூலம் இதுவரை சேர்த்த பெருமைகளை இழந்துவிட்டார் என்று பேசிகிறார்கள்.  இந்தப்பாடலை திருட்டுத்தனமாக வெளியிட்டது யார் என்று கேள்விக்குப் பெரும்பான்மையானோரின் பதில் சிம்பு என்றுதானிருக்கிறது. காவல்துறை உண்மையாகவே துப்றியத் தொடங்கினால் அவர்தான் மாட்டிக்கொள்வார் என்று சொல்லப்படுகிறது. அல்லது அவரே டம்மியாக ஏதாவதொருவரை சரணயடைய வைக்கலாம். அப்படி சரணடைகிறவர், வெளியிட்டதற்கு என்ன காரணம் சொல்வார்? இந்த ஆழ்ந்த கருத்து புதியசிந்தனையை இந்த வையகம் கொண்டாடவேண்டும் என்று நினைத்தே வெளியிட்டதாகச் சொல்வாரா? நீங்கள் ரசிக்கும் சிம்புவின் இன்னொரு முகத்தை மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக வெளியிட்டேன் என்று சொல்வாரா? அப்படிச் சொல்வாரானால் அவர் குற்றவாளியா? எது எப்படியானாலும் இப்படி ஒரு பாடலை மொபைலில் வைத்துகொண்டு திரிபவர்களை ஆங்கிலத்தில் "பெர்வெர்ட்" என்று சொல்வார்கள்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad