தடைகளை தாண்டி முன்னேறிய யுவராஜ்
ரசிகர்களால் செல்லமாக யுவி என்று அழைக்கப்படும் யுவராஜ் இன்று தனது 33வது வயதில் அடியெடுத்துவைத்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற முத்திரையை பதித்த இவர், இன்று வரை அந்தப்பெயரை காப்பாற்றி வருகிறார் என்று சொன்னால் அது மிகையல்ல. சண்டிகரில் 1980 ஆம் ஆண்டு பிறந்த இவர், தந்தையின் வழிகாட்டலின் படி, 2002 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். 2002 ஆண்டில் நாட்வெஸ்ட் இறுதிபோட்டியில் இமாலய இலக்கை இந்தியா எட்ட இவர்தான் காரணமாக இருந்தார். 2007ம் ஆண்டு முதல் T20 உலகக் கோப்பையில், ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸ்ர் அடித்து சாதனை படைத்தார். 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்ல ஒருவகையில் காரணமாக இருந்த இவர் தொடர் நாயகன் பட்டத்தை வென்றார். ஆனால், துரதிர்ஷ்டவசத்தால் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். தன்னம்பிக்கை இருந்தால் எவ்வித தடைகளையும் தாண்டி முன்னேறலாம் என்பதை நிரூபித்து நோயிலிருந்து மீண்டு வந்தார். மீண்டு வந்த அவருக்கு இந்திய கிரிக்கெட்டில் இடமளிக்கப்பட்டது, மீண்டும் அதிரடியான தனது வெற்றிப்பயணத்தை ஆரம்பித்தார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து உலக சாதனை படைத்தார். இடையில், தனது ஆட்டத்தில் சிறிது தளர்ந்துபோன யுவராஜை அணி கழற்றிவிட்ட நிலையில், 2015 ஆம் ஆண்டு ரஞ்சிக்கோப்பை போட்டியில் சதமடித்து அசத்தினார். மேலும் பத்மஸ்ரீ விருதினையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.