Matrimony OTT-Platforms Jobs Coupons Business

2015ம் ஆண்டை கலக்கிய கிரிக்கெட் வீரர்கள்

நடப்பு ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சில வீரர்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது.
அவர்கள் ஒருநாள் போட்டியில் 1000 ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளனர்.

கனே வில்லியம்சன்:-



நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அவர் இந்த வருடம் 25 போட்டிகளில் பங்கேற்று 3 சதம், 8 அரைசதம் என மொத்தம் 1317 ரன்களை குவித்துள்ளார்.  மேலும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 118 ரன்கள் குவித்து அசத்தினார்.

மார்ட்டின் குப்தில் :-


நியூசிலாந்து அணியின் தொடக்க வீரரான மார்ட்டின் குப்தில் 29 போட்டிகளில் பங்கேற்று 1287  ரன்களை எடுத்துள்ளார். இதில் 4 சதமும், 6 அரைசதமும் அடங்கும்.  இந்த ஆண்டு நடந்த உலகக்கிண்ணப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 237 ரன்கள்  குவித்து மிரட்டினார்.

டிவில்லியர்ஸ்:-



இவருக்கு அடுத்த இடத்தில் தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் உள்ளார். 20 போட்டிகளில் விளையாடி உள்ள டிவில்லியர்ஸ், 5 சதம், 5 அரைசதமுடன் 1193 ரன்கள்  குவித்துள்ளார்.  இதில் உலகக்கிண்ணப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 162 ரன்கள்  குவித்தது அவரது அதிகபட்ச ரன்களாகும்

டில்ஷான்:-


இவருக்கு அடுத்த படியாக டில்ஷான் உள்ளார். 40 வயதை நெருங்கும் போதும் அதிரடியில் அசத்தும் டில்ஷான் இந்த ஆண்டு 22 போட்டிகளில் விளையாடி 1100 ஓட்டங்களை குவித்துள்ளார்.  4 சதம், 5 அரைசதம் விளாசியுள்ள டில்ஷானின் அதிகபட்ச ஓட்டம் 161 ஆகும். இதை உலகக்கோப்பை போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக எடுத்தார்.

ஹசிம் அம்லா:-


இந்த பட்டியலில் இடம்பெறும் 2வது தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா. இவர் 23 போட்டிகளில் விளையாடி 1062 ரன்களை  எடுத்துள்ளார். இதில் 4 சதம், 3 அரைசதம் அடக்கம்.  உலகக்கோப்பை போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 159 ரன்கள்  எடுத்தது அவரது அதிகபட்சம் ஆகும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad