நெருப்பாய் கிளம்பி தென் ஆப்ரிக்காவை வீழ்த்துவாரா கோஹ்லி?
இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் கோஹ்லி மகத்தான வெற்றி பெற்றுத்தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டோனியின் ஓய்வுக்கு பிறகு, தாய்மண்ணில் முதல் முறையாக கோஹ்லி தலைமையில் களமிறங்கும் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகள் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது, டெஸ்ட் தரவரிசையில் தற்போது தென் ஆப்ரிக்கா அணி(125 புள்ளி) முதலிடத்திலும், இந்தியா(100 புள்ளிகள்) 5 வது இடத்திலும் உள்ளது.
இந்திய அணி
கோஹ்லி(அணித்தலைவர்) முரளி விஜய், ஷிகர் தவான், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, சகா, அஷ்வின், ஜடேஜா, அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், லோகேஷ் ராகுல், ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன், இஷாந்த் சர்மா.
தென் ஆப்ரிக்கா
ஆம்லா(அணித்தலைவர்), டுபிளசி, டுமினி, டிவில்லியர்ஸ், எல்கர், பவுமா, இம்ரான் தாகிர், ஹார்மர், மார்னே மார்கல், பிலாண்டர், ஸ்டைன், ரபாடா, பைடிட், வான்ஜில், டேன் விலாஸ்.
டெஸ்ட் தொடர் நடக்கும் விவரம்
நவம்பர்: 5- 9 - டெஸ்ட் சண்டிகர்
நவம்பர்: 14 - 18 - 2வது டெஸ்ட் பெங்களூரு
நவம்பர்: - 25 - 29 - 3வது டெஸ்ட் நாக்பூர்
டிசம்பர்: - 3 - 7 - 4வது டெஸ்ட் டில்லி