முதன் முதலாக இது நம்ம ஆளு படத்திற்கு வந்த பாசிட்டிவ் பதில்
இது நம்ம ஆளு படம் ஆரம்பத்தில் நன்றாக தான் படப்பிடிப்பு சென்றது. பின் சிம்பு செய்த வம்பால் படப்பிடிப்பு நீண்டுக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் பாண்டிராஜ் கோபமாகி சூர்யா தயாரிப்பில் பசங்க-2 என்ற படத்தை எடுத்தே முடித்துவிட்டார். அந்த படம் கூட ரிலிஸ் ஆகிவிடும் போல, இது நம்ம ஆளு படம் எப்போது ரிலிஸ் ஆகும் என யாருக்கும் தெரியவில்லை.இந்நிலையில் சமீபத்தில் இது நம்ம ஆளு படத்தை சிம்புவிடம் போட்டுக்காண்பித்துள்ளார் பாண்டிராஜ். படத்தை பார்த்த சிம்பு படம் தனக்கு மிகவும் பிடித்ததாக கூறியுள்ளார்.மேலும், எந்த காட்சியும் இனி சேர்க்க தேவையில்லை, இப்படியே படத்தை ரிலிஸ் செய்யலாம் என கூற, பாண்டிராஜ் உற்சாகமடைந்தார். அனேகமாக டிசம்பர் மாதம் படம் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது