தீபாவளியை முன்னிட்டு பாண்டவர் அணி எடுத்த அதிரடி
நடிகர் சங்க தேர்தலில் அனைவரும் எதிர்ப்பார்த்தது போலவே பாண்டவர் அணி அமோக வெற்றிப்பெற்றது. இந்நிலையில் அடுத்து நடிகர் சங்க கட்டிட வேலைகள் குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருகின்றது.தற்போது தீபாவளியை முன்னிட்டு பாண்டவர் அணி நடிகர் சங்க உறுப்பினர்களான 3500 பேருக்கு ஸ்பெஷல் பரிசு ஒன்று கொடுக்கவுள்ளதாம்.இதில் ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களும் அடங்குவார்கள் என கூறப்படுகின்றது. அது என்ன பரிசு என்பது ரகசியமாகவுள்ளது. விஷால் அணியினர் இதுப்போல் சங்க கட்டிட விஷயத்திலும் ஏதேனும் அதிரடி முடிவு எடுத்தால் நல்லது.