உங்கள் தேர்வு சரியானது- ரஞ்சித்தை புகழ்ந்த ரஜினி
சூப்பர் ஸ்டார் தற்போது கபாலி படத்தின் படப்பிடிப்பிற்காக மலேசியா சென்றுள்ளார். இந்நிலையில் மலேசியாவே திருவிழா போல் ரஜினிகாந்த் செல்லும் இடமெல்லாம் கூட்டம் அலைமோதுகின்றது.கபாலி படத்திற்கு முதலில் சந்தோஷ் நாரயணனை, ரஞ்சித் கமிட் செய்யும் போது, ரஜினி பெரிதாக பாராட்டவில்லையாம். சமீபத்தில் அவர் இசையமைத்த பாடல்களை கேட்டுள்ளார்.அதிலும் குறிப்பாக பின்னணி இசையை கேட்ட சூப்பர் ஸ்டார், ரஞ்சித்திடம் ‘சூப்பர்...உங்கள் தேர்வு என்றுமே தவறாகாது’ என்று புகழ்ந்துள்ளார்