கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தாதது ஏன்?
இந்தியர்கள் ஏன் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தவில்லை. நமது காலத்தில் இதுதான் விளங்காத மர்மமாக இருக்கிறது. எப்போதாவது இந்திய அணி வெற்றி பெறுவதை நான் குறிப்பிடவில்லை. நிரந்தரமாக ஆதிக்கம் செலுத்துவதைப் பற்றி கூறுகிறேன். வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தியது. அதன்பின் ஆஸ்திரேலியா கோலோச்சியது. அதுபோல் இந்திய அணியால் முடியாதது ஏன்?. உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியம் உள்ள நாடுதான் இந்தியா. அதனால் பணத்துக்குப் பிரச்சினையில்லை. பண விஷயத்தில் நாம் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துகிறோம். மற்ற அணிகள் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். அந்த வகையில் ஐபிஎல் போட்டிகள் லாபகரமானதாக உள்ளன. ஆனால், இந்தியாவின் செல்வாக்கு உள்நாட்டுக்குள் மட்டும் அடங்கிவிடவில்லை. உலகில் எங்கு கிரிக்கெட் நடந்தாலும், இந்திய கம்பெனிகள் மோட்டார் சைக்கிள் முதல் பான் மசாலா வரை உள்ள விளம்பரங்களை வெளியிடுகின்றன. ஆனால், கிரிக்கெட்டில் இந்தியா ஏன் ஆதிக்கம் செலுத்தவில்லை. இதுவரை இந்தியா 157 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. வெற்றி 127 மட்டும்தான். உள்நாட்டில் மட்டும் நாம் சிறப்பாக விளையாடுகிறோம். இங்குள்ள சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான (ஸ்லோ விக்கெட்) மைதானங்கள் அப்படிப்பட்டவை. மற்ற அணிகளால் விக்கெட் எடுப்பது சிரமம். ஆனால், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான (பாஸ்ட் விக்கெட்) மைதானங்களில் விரைவாக இந்திய அணி தோல்வி அடைகிறது. ஆனால், முக்கியமான நாடுகளைச் சேர்ந்த எல்லா அணிகளுடனும் நாம் தோல்விக்கான புள்ளிவிவரங்க ளைதான் வைத்திருக்கிறோம். ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டிகளில் 40 தோல்வி, வெற்றி 24. இங்கிலாந்துடன் 43 தோல்வி, 21 வெற்றி. வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தோல்வி 30, வெற்றி 16 மட்டும்தான். பாகிஸ்தானிடம் கூட 12 டெஸ்ட்டில் தோல்வி அடைந்திருக்கிறோம். 12 போட்டியில்தான் வெற்றி கிடைத்துள்ளது. (நல்லவேளை பாகிஸ்தானுடன் நீண்ட நாட்களாக விளையாடவில்லை. விளையாடி இருந்தால் தோல்வி எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.) கடந்த 20 ஆண்டுகளாகதான் தென் ஆப்பிரிக்கா அணி சரியான முறையில் சர்வதேச போட்டிகளை விளையாடி வருகிறது. ஆனால், அந்த அணியுடன் கூட 13 டெஸ்டில் இந்தியா தோல்வி கண்டுள்ளது. வெற்றி வெறும் 7தான். இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மட்டும்தான் இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இலங்கையுடனான டெஸ்ட்டில் 7 தோல்வி, 16 வெற்றியுடனும் நியூசிலாந்துடனான போட்டிகளில் 10 தோல்வி 18 வெற்றிகளுடனும் இந்திய அணி இருக்கிறது. ஒரு நாள் போட்டிகளை பொறுத்த வரையிலும் மிகப்பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. இதுபோல் இன்னும் பல புள்ளிவிவரங்களை சொல்லி உங்கள் மனதை சோர்வடைய செய்ய நான் விரும்பவில்லை. கிரிக்கெட் போட்டிகளில் நாம் வெளிப்படுத்தும் வெறித்தனமான தேசப்பற்றும், இந்திய மக்களின் ஆர்வமும் கிரிக்கெட் அணி விளையாட்டில் எதிரொலிக்கவில்லை. என்னுடைய கேள்வி என்னவென்றால், இந்தியர்கள் ஆர்வம் காட்டும் இந்த ஒரு விளையாட்டில் நாம் ஏன் ஆதிக்கம் செலுத்தவில்லை. இந்தியர்கள் 120 கோடி பேர் உள்ளனர். பெரும்பாலானவர்கள் பார்ப்பதும் விளையாடுவதும் கிரிக்கெட்தான். ஆஸ்திரேலியாவில் 2.5 கோடிக்கும் குறைவான மக்கள்தொகைதான். ஆனால் அவர்கள் கிரிக்கெட்டை மட்டும் விளையாட்டாக நினைப் பதில்லை. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் ஒன்றாக சேர்த்தால், இந்தியாவின் மக்கள்தொகையில் பாதி கூட வராது. எனவே, போதிய அளவுக்கு திறமை வாய்ந்தவர்கள் இல்லை என்று சொல்வதற்கில்லை. ஐபிஎல் அணிகளை விரிவுபடுத்த முடியாததற்கு உள்ள சிக்கல் என்னவென்றால், உள்ளூரில் அணிகளை நிரப்புவதற்கு திறமைவாய்ந்தவர்கள் போதிய அளவுக்கு இல்லை என்பதுதான். எனவேதான் உள்ளூர் ஆட்டக்காரர்கள் சிலருக்கு மட்டும் சம்பளம் கொட்டி கொடுக்கப்படுகிறது. இதற்கு தேவை அதிகம் இருந்தும் சப்ளை குறைவாக இருப்பதுதான் காரணம். நம்மிடம் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது, திறமைவாய்ந்த ஆஸ்திரேலிய அணியை போல 60 அணிகள் இந்தியாவிடம் இருக்க வேண்டும். ஆனால், அப்படி ஒரு அணிகூட இல்லை. கிரிக்கெட் வரலாற்றில் அப்படிப்பட்ட திறமை வாய்ந்த அணி ஒன்றுகூட நம்மிடம் இருந்ததில்லை. ஏன் இல்லை? இதில் ஸ்லோ விக்கெட், பாஸ்ட் விக்கெட் என்ற கேள்வி இல்லை. அப்படியே இருந்தாலும், பாஸ்ட் விக்கெட்டில் இந்திய அணிக்கு பயிற்சி இல்லாதது ஏன்? இந்திய கிரிக்கெட் அணியிடம் போதிய அளவுக்கு பணம் உள்ளது. நமது அணி சரியான முறையில் பயிற்சி பெறுவதற்கு என்ன தேவையோ அதை பெற முடியும். ஆனால், ஏன் செய்யவில்லை? ஏனெனில், பயிற்சி இல்லாதது, சரியான வசதிகள் இல்லாதது போன்றவை எல்லாம் உண்மையான பிரச்சினையாக இல்லை. குறிக்கோள் மற்றும் விசேஷ திறமையில்தான் பிரச்சினை அடங்கி இருக்கிறது. எந்த விஷயத்திலும் நாம் உலக தலைவர்கள் இல்லை. அந்த வகையில் கிரிக்கெட் விளையாட்டையும் நாம் வழிநடத்தி செல்வதில்லை. இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. தனிநபராக விசேஷ திறமைகளில் நம்முடைய முதலீடு குறைவு. கிரிக்கெட் மைதானத்தில் இந்திய வீரர்களை பார்த்து, ஆஸ்திரேலிய வீரர்கள், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அல்லது இப்போது இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க வீர்களை பார்த்தால் ஏதோ தவறு அல்லது வித்தியாசம் தெரியும். ஒரு பக்கம் (நமது பக்கம் அல்ல) ஓட்டப் பந்தய வீரர்கள் போல இருக்கிறார்கள். மறு பக்கம் இந்தியர்கள் கொழு கொழுவென சப்பியாக அதேசமயம் தகுதியற்றும் இருக்கலாம். எனினும், இன்னும் தேசிய அணியாக உருவாக்கி இருக்கிறார்கள். நமக்கு திறமையை விட இதுபோதும் என்பதுதான் மிக முக்கியம். நம்மில் லட்சக்கணக்கானோர் கிரிக்கெட் பார்ப்பதை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். இந்த விளையாட்டுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து கொண்டுதான் இருக்கிறோம். கிரிக்கெட்டில் ஏன் மோசமாக இருக்கிறோம் என்பதை சிந்திப்பதில்லை.