அஜித்திற்கு விஜய் ரசிகர்கள் செய்த கௌரவம்
இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையை விட தீராத பிரச்சனை விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை தான். அவர்கள் நல்ல நண்பர்களாக இருந்தாலும், ரசிகர்கள் இன்று வரை மோதிக்கொண்டே தான் இருக்கின்றனர்.இந்நிலையில் அஜித் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வேதாளம் படம் திரைக்கு வரவிருக்கின்றது. இதனால், அஜித்தை வாழ்த்தி விஜய் ரசிகர்கள் சிலர் பேனர் வைத்துள்ளனர்.இதில் அஜித்,விஜய் இருவரும் எத்தனை தோல்விகள் கண்டாலும் மீண்டு வருவார்கள் என குறிப்பிட்டு உள்ளனர். இப்படியும் சில நல்ல ரசிகர்கள் இருக்க தான் செய்கிறார்கள்