நடிகனுக்கு கண்கள்தான் நடிக்க வேண்டும் என்று கூறும் நடிகர்
‘சவாலே சமாளி’, ‘துலாபாரம்’, ‘ஜீவனாம்சம்’ போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் மல்லியம் ராஜகோபால் மகன் ராஜ்பரத். இவர் எழில் இயக்கிய 555, மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களில் வித்திசயமான கதாபாத்திரத்தில் நடித்தவர். தற்போது ரவிச்சந்திரன் இயக்கும் ‘நட்பதிகாரம்’, ‘ஆந்திராமெஸ்’, ‘சிகை’, போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவர் தனது நடிப்பு அனுபவம் பற்றி கூறும்போது, என்னுடைய அப்பா சினிமாவில் இருந்தாலும் நான் சின்சியரா பி.இ. படிச்சு முடிச்சேன். ஐடி கம்பெனியில் வேலை கிடைச்சு போய்கிட்டிருந்தேன். ஒருநாள் எனக்குள் ஏற்பட்ட திடீர் முடிவுதான் நான் சினிமாவுக்கு வந்தது. பெரிய இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு போனேன். அப்பதான் என் அப்பா மல்லியம் ராஜகோபாலின் சாதனையை முழுமையாக நான் தெரிஞ்சுகிட்டேன். பாரதிராஜா நிறைய சொன்னார். அப்படித்தான் நான் மிஷ்கின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடிக்க முடிந்தது. அந்த படத்தில் தம்பா என்கிற வில்லன் கேரக்டரில் நடித்தேன். மிஷ்கின் இடம் சினிமாவை பற்றி நிறைய கத்துக்கிட்டேன். படத்தில் எனது கேரக்டரை நான் கண்களில்தான் காட்ட வேண்டும் என்று சொன்னார். ஒரு நடிகனுக்கு கண்கள்தான் முதலில் நடிக்க வேண்டும் என்றார். அதே டப்பிங் பேசும்போது இன்னொரு முறை நாம் நடிக்கணும் அப்போதான் டப்பிங் சரியா வரும் என்றார். இது இரண்டும் ரொம்ப முக்கியம் என்று கற்றுக்கொண்டேன். இப்போ நான் நடிக்கும் நட்பதிகாரம் படத்திலும் இயக்குனர் ரவிச்சந்திரனிடம் கதை எழுதும்போதிருந்தே நான் கூட இருக்கேன். அதனால் ஒரு சினிமாவை முழுக்க கற்றுக்கொள்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்னுடைய ஆசை ஒரு படத்தை இயக்கனும். அதற்கான அனுபவத்தை மிஷ்கினும், ரவிச்சந்திரனும் எனக்கு தந்திருக்காங்க. அவங்க பெயரையும் காப்பாற்றும். பொறுப்பும் அப்பா மல்லியம் ராஜகோபால் பெயரை காப்பாற்றும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது என்றார்.