அனுஷ்காவை தவறாக வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய காமெடி நடிகர்
அடிக்கடி ஹீரோயின்களை இரட்டை அர்த்தத்தில் வர்ணித்து சிக்கலில் சிக்குவது தெலுங்கு காமெடி நடிகர் அலிக்கு புதிதல்ல. இப்படித்தான் சுமாவை ஒரு முறை வர்ணித்ததால், அலியை சுமா கண்டித்ததாகச் சொல்லப்பட்டது. S/Oசத்திய மூர்த்தி படத்தின் வெற்றிக்கொண்டாட்டத்தில் சமந்தாவை ஏதோ சொல்ல அவர் நேரடியாகவே கவுன்ட்டர் கொடுத்து எச்சரித்தார். இப்படி அடிக்கடி நாயகிகள் மட்டுமல்ல ஹீரோக்கள், சக நடிகர்கள் என பொது இடத்தில் ஏதேனும் ரெட்டை அர்த்தங்களில் கருத்துகளைச் சொல்லி மாட்டிக்கொள்வது அலியின் வேலை. இப்போது இவர் வர்ணிப்பில் சிக்கிய நடிகை அனுஷ்கா. இஞ்சி இடுப்பழகி படத்தின் தெலுங்கு வெர்ஷனான சைஸ் ஸீரோ படத்தின் இசை வெளியீட்டில் தான் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.அதில் அலி பேசுகையில் ‘ பில்லா’ (பிரபாஸ் நடிப்பில் தெலுங்கில் வெளியான பில்லா) படத்திலிருந்தே நான் அனுஷ்காவின் கால்களுக்கு ரசிகன் எனக் கூற பலரும் சிரித்துவிட்டனர். எனினும் சம்மந்தப்பட்ட அனுஷ்காவிற்கும், மற்ற நடிகர்களுக்கு இது அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அலி எப்போதுதான் இப்படி மற்ற நடிகர் நடிகையரைப் பற்றி ரெட்டை அர்த்தத்தில் கருத்துகள் கூறுவதை விடப்போகிறாரோ என பலரும் புலம்பி வருகின்றனர்