மீண்டும் இணைகிறது நானும்ரவுடிதான் படக்குழு
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த நானும்ரவுடிதான் படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படத்தில் நடித்த விஜயசேதுபதி நயன்தாரா மட்டுமின்றி சின்னச்சின்ன வேடங்களில் நடித்தவர்களுக்கும் பெயர் கிடைத்திருக்கிறது. இதனால் இயக்குநர் விக்னேஷ்சிவனுக்கு அடுத்தபடம் இயக்கும் வாய்ப்பு உடனே கிடைத்திருக்கிறதாம். இப்போது அஜித்தை வைத்து வேதாளம் படத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கும் ஏ.எம்.ரத்னத்தின் நிறுவனத்துக்கு அடுத்தபடத்தை இயக்கவிருக்கிறாராம் விக்னேஷ்சிவன்.அந்தப்படத்திலும் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோர் நிச்சயம் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அதோடு இன்னொரு ஆச்சரியமாக த்ரிஷா இடம்பிடிக்கவும் வாய்ப்பிருக்கிறதென்று சொல்கிறார்கள். இப்போதைக்கு நானும்ரவுடிதான் குழு மீண்டும் சேருவது மட்டும் உறுதி என்று சொல்லப்படுகிறது. வேதாளம் படவெளியீட்டுக்குப் பிறகே இந்தப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.