கார்த்திக் சுப்பராஜ் படத்துக்காக எஸ் .ஜே .சூர்யா எடுத்த புது அவதாரம்
ஜிகர்தண்டா வெற்றிக்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி முடித்திருக்கும் படம் இறைவி. இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடித்துவிட்டன, இதில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை பற்றி எந்தவொரு தகவலும் வெளிவராத நிலையில் தற்போது எஸ்.ஜே. சூர்யா கதாபாத்திரத்தை பற்றி சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது. இதில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம், குறிப்பாக அவர் தோற்றமும் இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. தனித் தன்மையான இவரது கேரக்டர் வில்லன் ரோலுக்கு இன்னும் சரியாக பொருந்தும் என்கிறது படத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள்