மாருதியை தெறிக்க விடும் ரெனோ க்விட்
ரெனால்ட் நிறுவனம், MAKE IN INDIA கோட்பாடுபடி தயாரித்த க்விட் காரின் விற்பனை, தற்போது ஏறுமுகத்தில் இருக்கிறது. கார் அறிமுகமாகி ஒரு மாதம் ஆன நிலையில், 50 ஆயிரம் கார்களுக்கு மேல் புக்கிங் ஆகியுள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், டெல்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா ஆகிய பெரு நகரங்களில், குறைந்தது 3 மாசத்தில் தொடங்கி, அதிகபட்சம் 8 மாதம் வரை என காரின் வெயிட்டிங் பிரியட்டும் ஏறுமுகத்தில் இருக்கிறது. இதனால் காரின் ஒரு மாதத்திற்கான தயாரிப்பு அளவை, 6000 கார்கள் என்பதை, கணிசமாக உயர்த்தும் முடிவில் ரெனோ இருப்பதாகத் தெரிகிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, போட்டி கார் நிறுவனங்களான டாடா (நானோ), மாருதி சுஸுகி (ஆல்ட்டோ), ஹூண்டாய் (இயான்) ஆகியோர், வாடிக்கையாளர்களைத் தன்வசம் ஈர்ப்பதற்காக, காரின் விலையில் தள்ளுபடிகளைக் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.