பாகுபலிக்கே சவாலாக அமைந்த படங்கள்
பாகுபலி படம் மூலம் மொத்த இந்திய சினிமாவையும் தன் பக்கம் திருப்பியவர் ராஜமௌலி. எனினும் தெலுங்கு படங்களுக்கான ஐஐஎஃப்ஏ விருது விழாவில் பாகுபலிக்கும் சவாலாக இரண்டு படங்கள் விருது பட்டியலில் இடம்பிடித்துள்ளன. பாகுபலியை அடுத்து கதைக்காகவும், சமூக அக்கறைக்காகவும் என IIFA விருதுகளின் பட்டியலில் அதிகம் இடம்பிடித்துள்ள படம் ஸ்ரீமந்துடு. இதற்கிடையில் யாரும் எதிர்பாரா வண்ணம் நானியின் எவ்வடே சுப்ரமணியம் படமும் இந்த விருது வரிசையில் இடம்பிடித்துள்ளது.பட்டியலில் அதிகமாக 11 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது பாகுபலி. சிறந்த படமாக பாகுபலி, சிறந்த இயக்குநராக ராஜமௌலி, சிறந்த நடிகராக பிரபாஸ், சிறந்த நடிகையாக தமன்னா, சிறந்த குணச்சித்திர நடிகராக சத்யராஜ், நடிகையாக ரம்யா கிருஷ்ணன் என 11 பிரிவுகளில் பாகுபலி இடம்பிடித்துள்ளது. அதே போல் மகேஷ் பாபு நடிப்பில் ஸ்ரீமந்துடு படமும் 8க்கும் மேற்பட்ட பிரிவுகளில் இடம்பிடித்துள்ளது. இதற்கிடையில் நானியின் எவ்வடே சுப்ரமணியம் படமும் 5க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.