நான் பாகிஸ்தானுக்கு சென்ற போது நடந்த கொடுமை: கவாஸ்கரின் சுவாரஸ்ய தகவல்



இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மீண்டும் போட்டி நடைபெற வேண்டும் என்று முன்னாள் அணித்தலைவர் கவாஸ்கர் கூறியுள்ளார். 2008ம் ஆண்டு நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி புறக்கணித்தது.  இந்நிலையில் இந்தியா– பாகிஸ்தான் அணிகள் இடையே பொதுவான இடமான ஐக்கிய அரபு எமிரேட்சில், டிசம்பர்– ஜனவரி மாதங்களில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது.  இதற்கான ஒப்பந்தத்தில் இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கையெழுத்திட்டு இருந்தன. ஆனால் எல்லையில் நிலவும் பதட்டம் காரணமாக பாகிஸ்தானுடன் விளையாட மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.  இந்த நிலையில் இரு நாடுகளும் கிரிக்கெட் போட்டி தொடர்பாக கண்டிப்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று முன்னாள் தலைவரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.  அவர் மேலும் கூறுகையில், "இந்திய அரசு பலமுறை ஆலோசனை நடத்திய பிறகே பாகிஸ்தானுடன் விளையாட மறுப்பு தெரிவித்திருக்கும். ஆனால் பாகிஸ்தான் அணியுடன் விளையாட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம்.  பாகிஸ்தான் ரசிகர்கள் தங்கள் ஹீரோக்கள் விளையாடுவதை பார்க்க முடியவில்லை. அவர்கள் யூனிஸ்கான், அப்டிரி ஆட்டத்தை தொலைக்காட்சியில் தான் பார்க்க வேண்டி இருக்கிறது.  விளையாட்டை புறக்கணிப்பதால் ஒன்றும் நடந்து விடாது. இதனால் இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.  மேலும், கவாஸ்கர் பாகிஸ்தானுக்கு விளையாட சென்ற போது இந்திய வீரர்கள் மீதான கவனிப்பு தொடர்பாகவும் பேசியுள்ளார்.  இது பற்றி அவர் கூறுகையில், "இந்த நிகழ்வை நான் குற்றச்சாட்டாக தான் கூற விரும்புகிறேன். நான் மூன்று முறை பாகிஸ்தானுக்கு சென்றுள்ளேன்.  1978ல் முதல் முறை பாகிஸ்தான் செல்லும் போது எனது இடுப்பு 30 இன்ஞ்சாக இருந்தது. ஆனால் அங்கிருந்து திரும்பும் போது 32 இன்ஞ்சாக மாறிவிட்டது.  அதே போல் 1982-83ல் பாகிஸ்தான் சென்றோம். அப்போது அங்கிருந்து திரும்பும் போது எனது இடுப்பு 34 இன்ஞ்சாக மாறிவிட்டது. அந்த அளவு பாகிஸ்தானில் எங்களுக்கு சுவை மிகுந்த உணவுகள் தரப்பட்டன.  எனது இடுப்பை பெருக்க வைத்து பாகிஸ்தான் நிர்வாகத்தினர் தவறு செய்து விட்டனர்" என்று சிரித்தபடி தெரிவித்துள்ளார்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad