விஷாலுடன் ராதாரவி நடிக்க சம்மதித்தது ஏன்? வெளிவந்த உண்மை






குட்டிப்புலி, கொம்பன் ஆகிய படங்களை இயக்கிய முத்தையாவின் அடுத்தபடம் மருது. விஷால் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். படத்தில் முக்கியமான ஒரு வேடத்தில் நடிக்க ராதாரவியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். நடிகர்சங்கத் தேர்தலில் ராதாரவியை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றார் விஷால். தேர்தலின்போது நடந்த பரப்புரைகளில் ராதாரவி கொஞ்சம் கூடுதலாகவே விஷால் அணியை வறுத்தெடுத்தார். அது நடந்து ஓரிருவாரங்களில் விஷால் படத்தில் ராதாரவி நடிக்கிறார் என்றதும் எல்லோருக்கும் வியப்பு. இது எப்படி நடந்தது? என்கிற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது. அந்தக்கேள்வியை இயக்குநர் முத்தையாவிடம் கேட்டோம். அதற்கு, நான் கதையை எழுதும்போதே இந்தவேடத்தில் ராதாரவி நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துத்தான் எழுதினேன். நடிகர்சங்கத்தேர்தலில் இருவரும் இப்படி எதிரும்புதிருமாக ஆகிவிட்டனர் என்றதும் நானும் அவரைக் கேட்கவே தயங்கினேன். தேர்தல் முடிந்து சகஜநிலை ஏற்பட்டதும், ராதாரவி சாரை அணுகினேன். நடிக்கிறதுல எனக்கொண்ணும் பிரச்சனை  இல்லை எதுக்கும் நீ ஹீரோவையும் கேட்டுக்க என்றார், அதன்பின் விஷால் சாரிடம் சொன்னேன். அவரோ, கதைக்கு எது சரியா வருமோ அதைத் தாராளமாகச் செய்யுங்க என்றார். மிகப்பெரிய சிக்கலாகிவிடுமோ என்று நான் பயந்த விஷயம் முப்பது விநாடிகளில் முடிந்துவிட்டது என்கிறார்  இயக்குநர் முத்தையா. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் பதினைந்தாம்தேதி தொடங்கவிருக்கிறது என்றும் சொன்னார் முத்தையா.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad