விஷமிகள் கைவரிசை – இணையத்தில் வெளியான விஜய் படத்தின் சண்டைக் காட்சி
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதுப்படத்தின் சண்டைக் காட்சியின் சில வினாடி காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றப்பட்டுள்ளது. விஜய் அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்தப் படத்தில் விஜய் எதிரிகளுடன் மோதும் சண்டைக்காட்சியின் சில வினாடி வீடியோ காட்சிகள் விஷமிகள் சிலரால் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இது படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விஜய்யின் புலி படத்தின் ட்ரெய்லரை முறைப்படி வெளியிடுமுன் இணையத்தில் வெளியானது. அது குறித்து போலீஸில் புகார் தரப்பட்டு, ட்ரெய்லரை இணையத்தில் வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், விஜய்யின் புதுப்பட காட்சியும் இணையத்தில் வெளியாகியிருப்பது படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது