தங்கமகன் கதை இதுதானா
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், எமி சாக்ஸன், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கமகன். இதில் கே.எஸ் ரவிகுமார் மற்றும் ராதிகா தனுஷின் அப்பா அம்மாவாக நடிக்கின்றனர்.தற்போது இதன் கதை இதுதான் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தனது திருமணத்திற்கு முன்பு பொறுப்பில்லாமல் சுற்றி வருகிறார் தனுஷ். இந்தவேளையில் எமியுடன் ரொமான்ஸ் செய்கிறார்.தனது வீட்டின் நெருக்கடியால் சமந்தாவை திருமணம் செய்து கொண்டு இதன் பின் பொறுப்புள்ள கணவனாக மாறுகிறார் தனுஷ். படத்தின் ஒரு பகுதி ரொமான்ஸாகவும் ஒரு பகுதி குடும்பப்பாங்கான கதையாகவும் எடுக்கப்பட்டுள்ளது