பஜாஜ் அவென்ஜர்: சென்னை ஆன் ரோடு விலைகள்
லட்ச ருபாய்க்குள் க்ருஸர் பைக் வேண்டுபவர்களுக்கான சாய்ஸாக இருந்து வந்தது பஜாஜ் அவென்ஜர். 2005 முதல் விற்பனையில் இருந்து வரும் இந்த பைக், சராசரியாக ஒரு மாதத்திற்கு 4000 பைக்குகள் என்ற அளவில் விற்பனையாகிறது. அறிமுகமான போது 180சிசி இன்ஜின் பொருத்தப்பட்டிருந்த அவென்ஜர், இப்போது 220சிசி இன்ஜினைக் கொண்டிருக்கிறது. தற்போது உயர்ந்து வரும் க்ருஸர் வகை பைக்குகளின் விற்பனையை கருத்தில் கொண்டு, மேம்படுத்தப்பட்ட அவென்ஜர் பைக்கை சத்தமின்றி செய்து வந்தது பஜாஜ். அதன் ஸ்பை போட்டோக்கள் வேகமாக இணையத்தில் பரவி வந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில், 2 வேரியன்டுகளில், புதிய பைக்குகளைக் களமிறக்கியுள்ளது பஜாஜ்.ஸ்ட்ரிட் வேரியன்டில், புதிய அலாய் வீல்கள், முன்பக்க ஃபோர்க், இன்ஜின், எக்ஸாஸ்ட், ஹேண்டில்பார், பெட்ரோல் டேங்க், ஃப்யுவல் கேஜ் பின்பக்க மிரர்கள், ஆயில் கூலர், க்ளியர் லென்ஸ் இண்டிகேட்டர்கள், க்ராப் ரெயில் ஆகியவற்றிற்கு மேட் ப்ளாக் நிறம் பூசப்பட்டுள்ளது. அதனால் பைக் பார்ப்பதற்கு ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரிட் 750 போல தோற்றமளிக்கிறது. ஆனால் முக்கிய பாகங்களான டெயில் லைட், பெட்ரோல் டேங்க், சீட் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. தவிர பல்ஸர் 150-DTSi பைக்கில் உள்ள 149சிசி இன்ஜின், புதிய அவென்ஜரில் பொருத்தப்பட்டிருக்கிறது.க்ரூஸ் வேரியன்ட், பழைய அவென்ஜர் போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், கவனிக்கத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விண்டு-ஷீல்ட், க்ளியர் லென்ஸ் இண்டிகேட்டர்கள், ஸ்போக் வீல்கள், முன்பக்க ஃபோர்க், இன்ஜின், எக்ஸாஸ்ட், ஹேண்டில்பார், பெட்ரோல் டேங்க், பின்பக்க மிரர்கள், ஆயில் கூலர், ஃப்யுவல் கேஜ் ஆகியவை, க்ரோம் பூசப்பட்டு பளபளவென இருக்கின்றன. க்ராப் ரெயிலில், குஷனிங் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இரு பைக்குகளிலும் பொதுவாக, ஸ்பிடோ மீட்டரில் சிறிய டிஜிட்டல் ஸ்கிரின், புதிய டிஸைனில் ஃபுட் ரெஸ்ட், அதிக வெளிச்சத்தை உமிழக்கூடிய ஹெட்லைட், சாஃப்ட்டான இருக்கைகள் மற்றும் கைப்பிடிகள், மேம்பட்ட லோகோ மற்றும் கிராபிக்ஸ் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரு பைக்குகளின் சென்னை ஆன் ரோடு விலை, அவென்ஜர் 150 ஸ்ட்ரிட்: ரூ. 88, 272 மற்றும் அவென்ஜர் 220 க்ரூஸ் & ஸ்ட்ரிட்: ரூ. 98, 339 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.