இந்திய ஆடுகளங்கள் பற்றி மட்டும் சர்ச்சை கிளம்புவது ஏன்? வீராட் கோஹ்லி
இந்திய ஆடுகளங்கள் பற்றி தேவையில்லாமல் சர்ச்சை கிளப்பப்படுகிறது என இந்திய அணியின் டெஸ்ட் அணித்தலைவர் வீராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில் இன்று பேட்டியளித்த வீராட் கோஹ்லி கூறுகையில், ஆடுகளத்தின் தன்மை பற்றி இந்திய அணி கவலைப்பட்டதில்லை. தேவையில்லாமல் இந்திய ஆடுகளங்கள் பற்றி சர்ச்சை கிளப்பப்படுகிறது. ஏன் இந்திய ஆடுகளங்கள் பற்றி மட்டும் தேவையில்லாத சத்தம் வருகிறது என்பது புரியவில்லை. இரு அணிகளுமே அந்த ஆடுகளங்களில் ஆட முடியாது என்று கூறி விலகினால்தான் அந்த பிட்ச் மோசம் என்று அர்த்தம்.
இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னுக்கு சாதகமாக இருப்பது இயல்பான ஒன்றுதான். வேகப்பந்து வீசக்கூடிய ஒரு பேட்ஸ்மேனும், ஸ்பின் வீசக்கூடிய ஒரு பேட்ஸ்மேனும் இருப்பது அணிக்கு வலு சேர்க்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அணியில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து தற்போது கூற முடியாது என்றும், ஸ்டைன் மட்டுமல்ல தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரயுமே ஒன்றாக தான் பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.