விக்ரம் எடுக்கும் துணிச்சல் முடிவு- வெற்றி பெற்றுவாரா?
ஐ படத்தின் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போனதை நினைத்து விக்ரம் மிகவும் சோகத்தில் உள்ளார். ஏனெனில் 10 எண்றதுக்குள்ள படத்தின் தோல்வி விக்ரமின் மார்க்கெட்டை மீண்டும் பாதித்துள்ளது.இந்நிலையில் அடுத்து இவர் ‘அரிமாநம்பி’ இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவிருக்கின்றார். இப்படத்தை தொடர்ந்து ஒரு தோல்விப்பட இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கவுள்ளாராம்.அவர் வேறு யாரும் இல்லை, சசிகுமார் நடிப்பில் பிரம்மன் படத்தை இயக்கிய சாக்ரடீஸ் தானாம். விக்ரமின் இந்த துணிச்சல் முடிவு அவருக்கு வெற்றி தருமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்