ராஜூசுந்தரத்துடன் தொடங்கியது சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்தபடத்தை புதுமுகஇயக்குநர் பாக்யராஜ்கண்ணன் இயக்குகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, அனிருத் இசை, ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு, முத்துராஜ் கலை என்று வலிமையான தொழில்நுட்பக்கலைஞர்களைக் கொண்டு தயராகும் இந்தப்படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.இந்தப்படம் பற்றிய தகவல்கள் முன்பே வந்துவிட்டன. இன்று அந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. இன்று( நவம்பர் 2 )காலை ஆறுமணிக்கு, பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் படப்பிடிப்பு தொடங்கியதாம். தொடக்கநாளில் ஒருபாடல்காட்சியைப் படமாக்குகிறார்கள். அந்தப்பாடலில் சிவகார்த்திகேயனும் கீர்த்திசுரேஷூம் நடனமாடுகிறார்கள் என்றும் ராஜூசுந்தரம் நடனம் அமைக்கிறார் என்றும் சொல்கிறார்கள். இன்று தொடங்கி பிப்ரவரி இறுதிக்குள் படப்பிடிப்பை நிறைவுசெய்துவிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.