பிரேமம் ரீமேக்கில் நடிக்க தயார் - பதறவைக்கும் பவர்ஸ்டார்
கேட்கும்போதே குலை நடுங்குகிறது இல்லையா.? மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் எவ்வளவு பெரிய ஹிட்.. எவ்வளவு அழகியலான ஆட்டோகிராப் பாணியிலான காதல் கதை. இந்தப்படத்தை தமிழில் தனுஷ் பண்ணினால் செட்டாகுமா, சூர்யா நடித்தால் சூப்பராக இருக்குமா என பலரும் நகத்தை கடித்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருக்க கொஞ்சம் கூட கூச்சப்படாமல் பிரேமம் படத்தின் ரீமேக்கில் நடிக்க நான் தயார் என சோஷியல் மீடியாவில் தனது விருப்பத்தை தெரிவித்து டெரர் ஏற்றியுள்ளார் பவர்ஸ்டார் சீனிவாசன். அல்போன்ஸ் புத்திரன், நிவின்பாலி ஆகியோரின் காதுகளுக்கு இன்னும் இந்த தகவல் சென்று சேர்ந்திருக்காது. அப்படியே அவர்கள் கேள்விப்பட்டாலும் கூட அதற்கு பெரிதாக் ரியாக்ட் பண்ண மாட்டார்கள். காரணம் அங்கே மலையாளத்தில் சந்தோஷ் பண்டிட் என்கிற பெயரில் ஒரு பவர்ஸ்டார் இதேபோல உலாவந்துகொண்டு இருக்கிறார்.. ஆனால் பவர்ஸ்டாரின் விருப்பத்துக்கு இங்கே உள்ளூரில் ஆதரவும் எழவில்லை. எதிர்ப்பும் எழவில்லை. எந்திரன் ரஜினியாகவே மாறிய பவர்ஸ்டாருக்கு நிவின்பாலியாக மாறுவதா கஷ்டம்