பாகுபலியை ராஜமெளலி இயக்கியது ஏன்? ரகசியத்தை உடைத்த ராஜமௌலியின் தந்தை!
தன்னை ஒரு பொய்யன் எனக் கூறியுள்ளார் ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத். என் மகன் கண்டிப்பாக பெரிய ஆளாக வருவார் என்பதை நான் நம்பினேன். என் மகன் பிரபலமாகிவிட்டார் என்பதைக் காட்டிலும் அவர் படைப்பில் ஒரு நல்ல படம் மொழிகள் கடந்து ஜெயித்துள்ளது என்பதே எனக்கு மகிழ்ச்சி. நான் ஏன் இந்தப் படத்தை இயக்கினேன் தெரியுமா? என ராஜமௌலி என்னிடம் ஒருமுறை கேட்டார். அதற்கு அவரே சொன்ன பதில் நான் மகாபாரதத்தைப் படமாக்கப்போகிறேன். அதற்கான முன்னேற்பாடு தான் இந்த பாகுபலி எனக் கூறினார். என்னை நானே சோதித்துக்கொள்ள எடுக்கப்பட்டதே பாகுபலி. இதில் நான் வெற்றியடைந்தால் கண்டிப்பாக மகாபாரதம் உறுதி எனக் கூறியதாக ராஜமௌலி குறித்து அவர் தந்தை விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார்.ராஜமௌலி ரொம்பவும் கெட்டிக்காரர், ஒரே மனதாக , எளிமையாக இருப்பார். அதீத நேர்மையானவர் எனக் கூறிய விஜயேந்திர பிரசாத்திடம் உங்களை ஏன் நீங்கள் பொய்யன் எனக் கூறினீர்கள் என்ற கேள்விக்கும் பதிலளித்துள்ளார். நான் எனது பெண் தோழிகளைக் கண்டால் நீங்கள் தான் மிக அழகிய பெண் எனக் கூறுவேன். இதே பதிலை நான் சந்திக்கும் பெண்கள் அனைவரிடமும் கூறுவேன். அதனால் தான் பொய்யன் என்றேன். எனினும் கண்டிப்பாக அவர்கள் தான் பேரழகி என உணர்வேன் என ஜாலியாக கூறியுள்ள விஜயேந்திர பிரசாத். பாகுபலி, மற்றும் சல்மான் கான் நடித்த பஜ்ராங்கி பய்ஜான் எனக் கோடிகளில் வசூலித்த படங்களுக்குக் கதை எழுதியவர்.