ஹர்பஜனை தொடர்ந்து காதலியை கரம் பிடிக்கிறார் ரோஹித்
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரரான ரோஹித் சர்மா, தனது நீண்டநாள் தோழி ரித்காவை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். இந்திய அணியின் முன்னணி வீரரான ரோஹித் சர்மா, விளையாட்டு நிறுவன மேலாளரான ரித்கா (28) என்பவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மே மாதம் மும்பையில் நடந்தது. இந்நிலையில் தற்போது இவர்களது திருமண திகதி முடிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது டிசம்பர் 13ம் தேதி ரோஹித் சர்மா- ரித்கா திருமணம் மும்பை பாந்த்ராவில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் நடைபெறுகிறது. இந்த திருமணத்தை எளிய முறையில் நடத்த இரு வீட்டினரும் முடிவு செய்துள்ளனர். நேற்று முன் தினம் தான் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்- கீதா பாஸ்ரா திருமணம் நடந்தது. இந்த நிலையில் ரோஹித் சர்மாவும் தனது திருமண தேதியை அறிவித்திருக்கிறார்.