42 நாட்களில் 1,150 கோடிகள்! ஐபிஎல் தொடரின் சூப்பர் வருமானம்
உலக கிரிக்கெட் வாரியங்களில் மிகவும் பணக்கார அமைப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் இருந்து வருகிறது. இந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பிற்கு வலுசேர்க்கும் மற்றொரு விஷயம் தான் ஐபிஎல் தொடர். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பணம் கொட்டுகிறது. இதன் மூலம் இந்திய அரசுக்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக பல கோடி ரூபாய் வருமானமாக கிடைக்கிறது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பாக ரூ.1150 கோடி கிடைத்துள்ளது. இது 40 நாட்களில் நடந்த 60 போட்டிகள் மூலம் கிடைத்த பங்களிப்பு ஆகும். மேலும், நேரடியாக மற்றும் மறைமுகமாக ரூ.2650 கோடி வரை வர்த்தகம் நடந்துள்ளது. இந்த தவல்களை இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.